பைக்
null

பஜாஜ் - டிரையம்ப் கூட்டணியில் முதல் மோட்டார்சைக்கிள் - வெளியீட்டு விவரம்!

Published On 2023-03-22 13:29 GMT   |   Update On 2023-03-22 13:33 GMT
  • பஜாஜ் ஆட்டோ - டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் உருவாகி வருகிறது.
  • இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்தியாவிலும் அறிமுகமாகிறது.

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய 790சிசி சீரிசின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கும் 490சிசி மோட்டார்சைக்கிளை கேடிஎம் நிறுவனம் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. பேரலெல் டுவின் மாடல் என்ற வகையில், 490சிசி மாடல் அதிக செலவின்றி போதுமான செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை டியூக் சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை 2024 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். கேடிஎம் ஏஜி நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர், தலைமை செயல் அதிகாரி ஸ்டீஃபன் பைரர் அளித்த சமீபத்திய பேட்டியில் சில தகவல்களை வழங்கியுள்ளார்.

 

அதன்படி, புதிதாக 650சிசி அல்லது 690சிசி மாடல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடல் 790சசிசி பேரலல் டுவின் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பஜாஜ் ஆலையில், இதனை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

கேடிஎம் திட்டப்படி இது நேக்கட், சூப்பர்ஸ்போர்ட் அல்லது அட்வென்ச்சர் மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி பற்றி பேசும் போது, பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். 

Photo Courtesy: motorcyclenews 

Tags:    

Similar News