பைக்

பல்சர் பைக்கிற்கு குட்டி அப்டேட் கொடுத்த பஜாஜ் ஆட்டோ - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-07-14 11:38 IST   |   Update On 2025-07-14 11:38:00 IST
  • பஜாஜ் பல்சர் N160 மாடலின் புதிய வேரியண்ட் 280 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க் பெறுகிறது.
  • இது 8750 rpm இல் 16 hp பவர் மற்றும் 6750 rpm இல் 14.65 Nm டார்க்-ஐ வழங்குகிறது.

பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியாவில் தனது இரு சக்கர வாகன பிரிவை பன்முகப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிறுவனம் இப்போது பஜாஜ் பல்சர் N160 சீரிசின் புதிய வேரியண்ட்டை ஒற்றை இருக்கை மற்றும் டூயல் சேனல் ABS உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நிறுவனம் ஏற்கனவே ஒற்றை இருக்கை பதிப்பை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த வெர்ஷன் தற்போது டூயல் சேனல் ABS உடன் மிகவும் பாதுகாப்பாக மாறியுள்ளது.

பஜாஜ் பல்சர் N160 மாடலின் புதிய வெர்ஷன் வடிவமைப்பில் அப்படியே தான் காட்சியளிக்கிறது. இருப்பினும், இந்த பிராண்ட் மற்ற வேரியண்ட்களில் காணப்படும் ஸ்பிளிட்-சிட் அமப்பை நீக்கி, ஒற்றை இருக்கையை பொருத்தியுள்ளது. மேலும், பின்புற ஸ்பிளிட் கிராப் ஒற்றை-துண்டு அலகுடன் மாற்றப்பட்டுள்ளது. இது பில்லியனை மிகவும் விசாலமானதாக மாற்றுவதன் மூலம் மிகவும் வசதியான இருக்கையை அனுபவிக்க அனுமதிக்கிறது.

மேலும், ஹார்டுவேர் அம்சங்கள் ஏற்கனவே உள்ள வெர்ஷன்களிலிருந்து தக்கவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பஜாஜ் பல்சர் N160 மாடலின் புதிய வேரியண்ட் 280 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க் பெறுகிறது. மேலும் மற்ற மாடல்களை போலவே 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பெறுகிறது. புதிய N160 அதன் முந்தைய மாடலில் இருந்து 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் யூனிட்டை பெற்றிருக்கிறது.

பஜாஜ் பல்சர் N160 Bi-Functional LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அழைப்பு/எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷன்களுக்கான ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பயணத்தின்போது உங்கள் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டையும் இது கொண்டுள்ளது.

பஜாஜ் பல்சர் N160 பைக்கில் 164.82cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 8750 rpm இல் 16 hp பவர் மற்றும் 6750 rpm இல் 14.65 Nm டார்க்-ஐ வழங்குகிறது.

புதிய மாடலின் அறிமுகத்துடன், பஜாஜ் N160 வரிசையில் இப்போது நான்கு மாடல்கள் உள்ளன. பஜாஜ் பல்சர் N160 ஒற்றை இருக்கை பதிப்பின் விலை ரூ.1,22,720, பிளவு இருக்கையின் விலை ரூ.1,26,669, மற்றும் அப்சைடு-டவுன் ஃபோர்க் பதிப்பு ரூ.1,36,992 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை இருக்கை மற்றும் டூயல் சேனல் ABS கொண்ட பஜாஜ் பல்சர் N160 இன் புதிய மாடல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்ப்லிட் சீட் என இரு மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,25,722 (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Tags:    

Similar News