பைக்

மூன்று நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமான பஜாஜ் பல்சர் N150

Published On 2023-09-26 13:46 GMT   |   Update On 2023-09-26 13:46 GMT
  • பஜாஜ் பல்சர் N150 மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.
  • பல்சர் N150 மாடல் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் N150 மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பைக் ஆகும். இதுதவிர பஜாஜ் பல்சர் P150 மற்றும் பல்சர் 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

பல்சர் N150 மாடலின் தோற்றம் N160 மாடலில் உள்ளதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர், இரண்டு எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்.சி.டி. செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பல்சர் மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த என்ஜின் 14.5 ஹெச்.பி. பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 134, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பஜாஜ் பல்சர் N150 மாடல் ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V, சுசுகி ஜிக்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News