பைக்

ரூ. 11 லட்சம் விலையில் புது பைக் அறிமுகம்

Update: 2022-08-06 09:10 GMT
  • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்தது.
  • இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள் உள்ளன.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2023 போன்வில் T120 பிளாக் எடிஷன் - சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பெயிண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஜெட் பிளாக் நிற வேரியண்ட் உடன் இணைகிறது. ஜெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். இதன் சபையர் பிளாக், மேட் சபையர் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் அம்சங்கள் போன்வில் T120 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இதில் 1200 சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 78.9 ஹெச்.பி. பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

ஹார்டுவேரை பொருத்தவரை கிராடில் பிரேம், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், முன்புறம் டூயல் டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News