பைக்

வேற லெவல் அப்டேட்களுடன் 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் அறிமுகம்

Published On 2022-12-01 09:12 GMT   |   Update On 2022-12-01 09:12 GMT
  • கேடிஎம் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் புது மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது.
  • எல்இடி ஹெட்லைட்களின் மேல்புறமாக 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் புதிதாக விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் நிறுவனம் முற்றிலும் புதிய 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 மாடலின் அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெரும்பாலன டிசைன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அட்வென்ச்சர் ஸ்டைலிங் மற்றும் உயரமான ஸ்டான்ஸ் 2023 மாடலிலும் பின்பற்றப்பட்டு உள்ளது.

புதிய மாடலின் ஹெட்லைட் மற்றும் ஸ்கிரீன் டிசைன் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஃபேரிங் அதிகளவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. இத்துடன் புதிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் என்ஜின் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பாதுகாக்க புதிதாக அலாய் கார்டு பொருத்தப்பட்டுள்ளது.

2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டீல் டியூப் ஆல்டர் செய்யப்படாமல், ரிவேம்ப்டு 43mm WP அபெக்ஸ் USD ஃபோர்க்குகளை கொண்டிருக்கிறது. பின்புறம் WP அபெக்ஸ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் பிரேக்கிங் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 21 இன்ச், பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள், பைரெளி ரேலி STR டயர்களை கொண்டிருக்கின்றன. அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் மேம்பட்ட 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, குயிக்‌ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் செட்டிங்ஸ் உள்ளது.

கேடிஎம் நிறுவனம் 2023 மாடலின் விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், முந்தைய மாடலின் விலை GBP 10 ஆயிரத்து 449, இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புது மாடலின் விலை இதைவிட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News