பைக்

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-04-17 16:24 IST   |   Update On 2023-04-17 16:24:00 IST
  • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • முன்னதாக 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X மாடல் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலை OBD2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகிறது. 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் புதிய புகை விதிகளுக்கு ஏற்ற ஹார்டுவேர் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய மோட்டார்சைக்கிளின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 38 ஆயிரத்து 746 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் X மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்து 652 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன், என்ஜின் கவுல், 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட்கள், சைடு-ஸ்லங் எக்சாஸ்ட், முன்புறம் 19 இன்ச் அலாய் வீல், பின்புறம் 17 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் அட்லாண்டிக் புளூ மற்றும் டார்க் கல்வேனோ பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் போன்றே இந்த மாடலின் ஹார்டுவேர் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், போல்ட் செய்யப்பட்ட சப்-ஃபிரேம் உள்ளது. 

Tags:    

Similar News