பைக்

2023 ஹார்னெட் 2.0 இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-08-28 12:00 GMT   |   Update On 2023-08-28 12:00 GMT
  • புதிய ஹோண்டா மாடலில் எல்.இ.டி. லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.
  • 2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலில் 184.4சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.

ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது ஹார்னெட் 2.0 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும், அப்டேட்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடல் பார்க்க அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.

புதிய ஹோண்டா மாடலில் எல்.இ.டி. லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், என்ஜின் கில் ஸ்விட்ச், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் எல்.சி.டி. டேஷ்போர்டில் 5-லெவல் இலுமினேஷன் கண்ட்ரோல், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

 

2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலில் 184.4சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மற்ற மாடல்களை போன்றே, 2023 ஹார்னெட் 2.0 மாடலுக்கும் ஹோண்டா நிறுவனம் பத்து ஆண்டுகள் வரையிலான வாரண்டி வழங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த சில நாட்களில் துவங்க இருக்கிறது.

Tags:    

Similar News