பைக்

புதிய நிறம், அசத்தல் அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமான 2023 ஹோண்டா CB200X

Published On 2023-09-15 11:29 GMT   |   Update On 2023-09-15 11:29 GMT
  • 2023 ஹோண்டா CB200X மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
  • புதிய ஹோண்டா CB200X மாடலில் 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB200X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 CB200X மாடல் தற்போது OBD-2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 2023 ஹோண்டா CB200X மாடலின் தோற்றம் மற்றும் டிசைன் 2022 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி இந்த மாடல் மஸ்குலர் தோற்றம், சிங்கில்-பீஸ் ஹெட்லைட், பிகினி ஃபேரிங், ஸ்மோக்டு வைசர், ஸ்ப்லிட் சீட் செட்டப், 2-பீஸ் கிராப் ரெயில், நியூட்ரல் ரைடர் டிரை-ஆங்கில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

 

டிசைன் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்ற போதிலும், 2023 ஹோண்டா CB200X மாடல் புதிதாக டிசெண்ட் புளூ மெட்டாலிக் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் OBD-2 விதிகளுக்கு பொருந்தும், 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த என்ஜின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஃபியூவல் லெவல், நேரம் மற்றும் பல்வேறு விவரங்கள் காண்பிக்கப்படுகிறது.

புதிய CB200X மாடலில் ஹோண்டா நிறுவனம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகளையும், மோனோஷாக் யூனிட்டையும் வழங்கி இருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய 2023 ஹோண்டா CB200X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 999. எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News