பைக்

2023 பிஎம்டபிள்யூ R 1250 RS அறிமுகம்

Update: 2022-11-12 07:57 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் முற்றிலும் புதிய R 1250 RS மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த மாடலில் 136ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1254சிசி பாக்சர் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2023 R 1250 RS ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 பிஎம்டபிள்யூ R 1250 RS மாடலில் புதிய ஸ்டாண்டர்டு அம்சங்கள், விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலின் திறன்களை மேம்படுத்தும்.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ R 1250 RS மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1254சிசி, ட்வின் சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 136 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் பிரிவில் டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், புதிய "Eco" டிரைவிங் மோட் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ இண்டெக்ரல் ஏபிஎஸ் ப்ரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஃபுல் எல்இடி லைட்டிங், கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, யுஎஸ்பி சாக்கெட் மற்றும் இண்டெலிஜண்ட் எமர்ஜன்சி கால் வசதி உள்ளது.

ரைடிங் மோட்ஸ் ப்ரோ மற்றும் ரைடிங் மோட் பிரீசெலக்‌ஷன், என்ஜின் டிரேக் கண்ட்ரோல், ஹீடெட் சீட்கள், டியூப் ஹேண்டில்பார்கள் ஆப்ஷனல் உபகரணங்களாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெல்லிய ட்வின் பாட் ஹெட்லைட், ஃபுல் ஃபேரிங், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News