பைக்
டி.வி.எஸ். அபாச்சி RR310, ரேஸ் பைக்

201.2Kmph வேகம் - அலற விட்ட அபாச்சி RR 310, எங்கு தெரியுமா?

Published On 2022-06-04 07:56 GMT   |   Update On 2022-06-06 09:51 GMT
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி RR 310 மாடல் பந்தய களத்தில் புது சாதனையை படைத்து இருக்கிறது. இத்தகைய சாதனையை படைத்த முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.


டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்றவர்கள் அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக் கொண்டு பந்தய களத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரேசிங் பைக் செபாங் சர்வதேச சர்கியூட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மலேசியாவில் உள்ள இந்த பந்தய களத்தில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடல் மணிக்கு 201.2 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அந்த வகையில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை அபாச்சி RR 310 பெற்று இருக்கிறது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு, டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கியது,



நான்கு கட்டங்களில் நடைபெறும் ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரில் 16 பேர் பங்கேற்கின்றனர். அபாச்சி RR 310 ஆசியா OMC ரேஸ் பைக்கில் 312சிசி, DOHC, 4 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான அபாச்சி RR 310 மாடலை விட 38 சதவீதம் கூடுதல் திறன் வெளிப்படுத்துகிறது. 

இதுதவிர டி.வி.எஸ். அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கில் குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாடிவொர்க், வீல்ஸ் மற்றும் சப்-ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News