பைக்

விரைவில் இந்தியா வரும் 2022 கவாசகி வெர்சிஸ் 650

Update: 2022-06-16 08:49 GMT
  • கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மாடலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • இதன் மேம்பட்ட மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2022 வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போதைய கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய 2022 கவாசகி வெர்சிஸ் 650 இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வினியோகம் ஜூலை மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

2022 கவாசகி வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள் விலை, அதன் முந்தைய மாடலை விட ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். அதிக விலைக்கு ஏற்றார்போல் புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் புதிய, கூர்மையான தோற்றம், 4 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன், டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 2 லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.


புதிய 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 66 பி.ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் சேசிஸ், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படலாம்.

தற்போதைய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் அல்லது ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News