பைக்

புதிய நின்ஜா 400-ஐ புக் செய்தவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கவாசகி

Published On 2022-09-13 09:03 GMT   |   Update On 2022-09-13 09:03 GMT
  • கவாசகி இந்தியா நிறுவனம் தனது புதிய நின்ஜா 400 பிஎஸ் 6 மாடலை இந்திய சந்தையில் இரண்டு நிறங்களில் விற்பனை செய்து வருகிறது.
  • நின்ஜா 400 மாடல் கேடிஎம் RC390 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது. பிரீமியம், சப்-500சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் விலையை விட ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்த விலைக்கு பெரிய என்ஜின் மற்றும் அதிக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 44 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பவர் மாறாத நிலையில், டார்க் மட்டும் முந்தைய மாடலில் இருந்ததை விட 1 நியூட்டன் மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது.

2022 கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடல்- லைம் கிரீன் மற்றும் எபோனி மற்றும் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பிரேக்கிங்கிற்கு 310 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 220 மில்லமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடல் கேடிஎம் RC390 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News