ஆட்டோமொபைல்

இந்தியாவில் யமஹா ஆர்15 வெர்ஷன் 2.0 விற்பனை நிறுத்தம்

Published On 2018-08-18 11:13 GMT   |   Update On 2018-08-18 11:13 GMT
யமஹா நிறுவனம் இந்தியாவில் ஆர்15 வெர்ஷன் 2.0 மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் அந்நிறுவன வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #YAMAHA


யமஹா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்15 வெர்ஷன் 2.0 யமஹா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

யமஹா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஆர்15 வெர்ஷன் 3 விற்பனை அதிகரிக்கும் நிலையில், பழைய மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் பெர்ஃபார்மன்ஸ் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆர்15 மாடலின் முதல் தலைமுறை மாடல் மற்றும் யமஹா மோட்டோ ஜிபி மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. யமஹா YZF-R15 V3.0 மாடலில் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.03 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் கியர் டவுன்ஷிஃப்ட் செய்யும் போது மென்மையாக இருக்கும். 

இத்துடன் செயல்திறனை மேம்படுத்தும் VVA சிஸ்டம் எனும் அம்சத்தை யமஹா அறிமுகம் செய்திருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 வடிவமைப்பு அதன் முந்தைய YZF-R1  மற்றும் YZF-R6 மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட காற்றோட்டத்துடன் கூடிய முன்பக்க ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் டெயில் பகுதியில் புதிய வடிவமைப்புடன் கூடிய டெயில் லைட் மற்றும் டையர் ஹக்கர் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 மாடலில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், 18 பாராமீட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News