ஆட்டோ டிப்ஸ்

மீண்டும் விற்பனைக்கு வரும் யமஹா RX100!

Published On 2022-12-14 17:04 IST   |   Update On 2022-12-14 17:04:00 IST
  • யமஹா நிறுவனத்தின் RX100 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தியது.
  • இன்றும் பயன்படுத்திய வாகனங்கள் சந்தையில் யமஹா RX100 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

யமஹா RX100 மோட்டார்சைக்கிள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் எய்ஷின் சிஹானா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனினும், புதிய மாடல் பழைய 2-ஸ்டிரோக் வெர்ஷன் போன்று இல்லாமல் அதிநவீன ரெட்ரோ தோற்றம் கொண்டிருக்கும்.

யமஹா இந்தியா நிறுவனத்தின் பிரபல பிளாட்ஃபார்மாக யமஹா FZ பிளாட்ஃபார்ம் உள்ளது. அந்த வகையில் இதே பிளாட்ஃபார்மில் புது மாடலை உருவாக்கி அதில் இருந்து லாபம் பார்க்க யமஹா இந்தியா முடிவு செய்து இருக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாடலின் உற்பத்தி செலவீனங்கள் குறையும். ஆனால், யமஹா நிறுவனம் இவ்வாறு செய்யாது என்றும் புது மாடலில் 149சிசி அல்லது FZ 25 மாடலில் உள்ள என்ஜின் எதுவும் புது மாடலுக்கு பொருந்த்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் புது மாடலுக்காக யமஹா நிறுவனம் முற்றிலும் புது பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய 155சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2008 ஆம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மோட்டார் அதிக விற்பனையை பெற்று கொடுக்கிறது. அந்த வகையில் இந்த என்ஜின் புதிய RX100 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 2026 வரை புதிய யமஹா RX100 மாடல் அறிமுகம் பற்றி எந்த தகவலும் வெளியாகாது என்றே தெரிகிறது.

Tags:    

Similar News