ஆட்டோ டிப்ஸ்

புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் வினியோகத்தை துவங்கிய டொயோட்டா

Update: 2022-10-01 11:38 GMT
  • டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விற்பனை நடைபெற்று வருகிறது.
  • இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த காரின் விலை விவரங்கள் சில தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை வாங்கியவர்களுக்கு காரை வினியோகம் செய்யும் பணிகளை டொயோட்டா துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டிரீங் ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து 114 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

புதிய ஹைரைடர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், போக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News