ஆட்டோ டிப்ஸ்

எலெக்ட்ரிக் கார் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ் - ஏன் தெரியுமா?

Published On 2022-12-22 17:09 IST   |   Update On 2022-12-22 17:09:00 IST
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக விளங்குகிறது.
  • டாடா டியாகோ EV மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றஏ வழங்கப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு நான்கு சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்ற விவரங்கள் அடுத்த மாதம் தான் வெளியாகும். விலை உயர்வை அடுத்து டாடா டியாகோ EV மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம்.

புதிய டியாகோ EV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் போதே, அதன் விலை அறிமுக சலுகையாக குறைத்து அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருந்தது. மேலும் அறிமுக விலை காரை முதலில் வாங்கும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. எனினும், காருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து சலுகை முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

"அறிமுக சலுகை மட்டுமின்றி பேட்டரி விலைகள் 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதும் கார் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவுக்கான நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். டியாகோ EV மாடலின் பெரும்பாலான பாகங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News