ஆட்டோ டிப்ஸ்

இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய ஸ்கோடா கார்

Update: 2022-08-09 11:38 GMT
  • ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்திய சந்தையில் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. என்யாக் iV எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடலே இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்பை படங்கள் பூனேவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்டுள்ளன. சாலையில் காணப்பட்ட ஸ்கோடா என்யாக் iV மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காணப்படுகிறது.


Photo Courtesy: Twitter / @madhavrajpuroh2

இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் என்யாக் iV மாடல் தான் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா என்யாக் iV மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கோடா என்யாக் iV மாடல் 55 கிலோவாட் ஹவர், 62 கிலோவாட் ஹவர் மற்றும் 82 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை முறையே 340 கிமீ, 360 கிமீ மற்றும் 510 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. சர்வதேச சந்தையில் ஸ்கோடா என்யாக் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

Tags:    

Similar News