ஆட்டோ டிப்ஸ்

கியா EV6 வாங்கி எம்எஸ் தோனி செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!

Published On 2022-11-18 11:31 GMT   |   Update On 2022-11-18 11:31 GMT
  • இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வாகனங்கள் மீது தனி பிரியம் கொண்டவர்.
  • தனது இல்லத்தில் ஏராளமான பைக் மற்றும் கார்களை வாங்கி கரேஜ் ஒன்றை எம்எஸ் தோனி வைத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் கார் மற்றும் பைக் மீது அதீத மோகம் கொண்டவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. உலக கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு பெயர் பெற்ற எம்எஸ் தோனி தனது வீட்டில் ஏராளமான பழைய மற்றும் அதிநவீன கார், பைக் வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த வரிசையில், எம்எஸ் தோனி கரேஜில் புதுவரவு வாகனமாக கியா EV6 சேர்ந்து இருக்கிறது. இது எம்எஸ் தோனி வாங்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் வீடியோவில், எம்எஸ் தோனி கியா EV6 மாடலில் கிரிக்கெட் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் அமரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கிரெ நிறம் கொண்ட கியா EV6 மாடல் முற்றிலும் புதிதாக காட்சியளிப்பதோடு, தற்காலிக பதிவு எண் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 விலை உயர்ந்த முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. மேலும் கியா EV6 மாடல் குறுகிய எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா EV6 மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கியா இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவரை இந்திய சந்தையில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான கியா EV6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் கியா EV6 விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதில் 2 வீல் டிரைவ் வசதி, முன்புறம் மவுண்ட் செய்யப்பட்ட ஒற்றை மோட்டார் உள்ளது. இது 229 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே கார் வெவ்வேறு பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News