ஆட்டோ டிப்ஸ்

கேடிஎம் RC சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-09-27 10:06 GMT
  • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் RC390 மற்றும் RC200 ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
  • இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் RC16 மோட்டோஜிபி ரேசிங் பைக்குகளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் இந்தியா நிறுவனம் RC390 மற்றும் RC200 மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் RC16 மோட்டோஜிபி ரேசிங் பைக்குகளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஜிபி ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்கள் தற்போது விற்பனை செய்யப்படும் கேடிஎம் RC சீரிஸ் மாடல்களுடன், அதே விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. அந்த வகையில் கேடிஎம் RC390 ஜிபி விலை ரூ. 3 லட்சத்து 16 ஆயிரத்து 070 என்றும் கேடிஎம் RC200 ஜிபி எடிஷன் விலை ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டைலிங்கை பொருத்தவரை இரு மாடல்களிலும் ஆரஞ்சு நிற பேஸ் பெயிண்ட் செய்யப்பட்டு ஃபேரிங் மற்றும் முன்புற ஃபெண்டரில் பிரத்யேக டிகல்கள் வழங்கப்பட்டுள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை.

கேடிஎம் RC390 மற்றும் கேடிஎம் RC200 ஜிபி ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News