ஆட்டோ டிப்ஸ்

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2023-01-17 11:55 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
  • கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக ஸ்பர் கிரீன் எனும் நிறத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகிறது.

காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது.

உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் CNG யூனிட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News