ஆட்டோ டிப்ஸ்

தீவிர டெஸ்டிங்கில் சிட்ரோயன் C3 புது வேரியண்ட்

Published On 2022-08-20 11:48 GMT   |   Update On 2022-08-20 11:48 GMT
  • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • இந்த காரின் CNG வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது C3 ஹேச்பேக் மாடலின் புது வேரியண்டை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. விரைவில் சிட்ரோயன் C3 காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சிட்ரோயன் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும்.


Photo Courtesy: GaadiWaadi 

CNG கிட் பொருத்தப்படும் பட்சத்தில் இந்த காரில் குறைந்த அளவு பூட் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன் அளவுகள் குறைந்து இருக்கும். புதிய சிட்ரோயன் C3 CNG வேரியண்டிலும் 1.2 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 80.8 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG-ஐ பயன்படுத்தும் போது செயல்திறன் மற்றும் டார்க் அளவுகள் கணிசமாக குறைந்து விடும். இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவதை பார்க்கும் போது பிரென்ச் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை நீட்டிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதை அறிய முடிகிறது.

Tags:    

Similar News