ஆட்டோ டிப்ஸ்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் கார்

Published On 2022-09-23 10:49 GMT   |   Update On 2022-09-23 10:49 GMT
  • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
  • இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் சில மாதங்களுக்கு முன் C3 ஹேச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சிட்ரோயன் C3 அறிமுகம் செய்யும் முன்பே C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சிட்ரோயன் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்வதற்கு மாற்றாக கார் உற்பத்தியாளர்கள் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிட்ரோயன் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இது தவிர டாடா மோட்டார்ஸ் விரைவில் தனது டியாகோ எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் வுலிங் ஏர் எலெக்ட்ரிக் காரை தழுவி சிறிய காரை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடலின் பெண்டர் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது. தற்போதைய ஸ்பை படத்தில் காரின் முழுமையாக தெரியவில்லை. மஹிந்திரா XUV400 போன்றே இந்த காரிலும் முன்புற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்திய சூழலுக்கு முழுமையாக ஏற்ற வகையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் காரில் முன்புற கிரில் மூடப்பட்டு, மற்ற பாகங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

தற்போது சிட்ரோன் C3 பெட்ரோல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy: Team BHP

Tags:    

Similar News