ஆட்டோ டிப்ஸ்

சிட்ரோயன் C3 இந்திய வினியோக விவரம்

Update: 2022-07-28 11:44 GMT
  • சிட்ரோயன் நிறுவனத்தின் ஹேச்பேக் மாடல் C3 இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த காரின் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடல் விலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிட்ரோயன் C3 மாடல் லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் பத்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆறு டூயல் டோன் மற்றும் நான்கு மோனோ டோன் நிறங்கள் அடங்கும். சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட்கள், ஃபாக் லைட்கள், காண்டிராஸ்ட் கலர் ஸ்கிட் பிளேட்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர், 10 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஹைட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News