ஆட்டோ டிப்ஸ்

420 கிமீ ரேன்ஜ் வழங்கும் பிஒய்டி அட்டோ 3 - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2022-09-21 12:03 GMT   |   Update On 2022-09-21 12:03 GMT
  • பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • இது இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

பிஒய்டி இந்தியா நிறுவனம் தனது அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அக்டோபர் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இ6 மாடலை தொடர்ந்து இந்தியாவில் பிஒய்டி அறிமுகம் செய்யும் இரண்டாவது மாடலாக அட்டோ 3 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வெளிப்புறம் 2022 பிஒய்டி அட்டோ 3 சிங்கில்-ஸ்லாட் க்ரோம் கிரில், ட்வின்-பாட் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் பம்ப்பர்கள், டிஸ்க் பிரேக்குகள், முன்புற பெண்டரில் சார்ஜிங் போர்ட், பாக்ஸ் ஸ்கிட் பிளேட், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் பின் ஆண்டெனா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

 சர்வதேச சந்தையில் கிடைக்கும் பிஒய்டி அட்டோ 3 மாடலில் 50 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு ரேன்ஜ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேன்ஜ் என இருவித வேரிண்ட்களில் கிடைக்கிறது.

இவை முறை 345 மற்றும் 420 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி திறனுக்கு ஏற்ப இந்த காருடன் 204 பிஎஸ் மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பிஒய்டி அட்டோ 3 மாடலில் 12.8 இன்ச் சுழலும் இன்போடெயின்மெண்ட் டச்-ஸிகீரன், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூப், ADAS சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News