ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் வெளியான 2023 இன்னோவா க்ரிஸ்டா டீசல் விலை விவரங்கள்!

Published On 2023-03-14 13:13 GMT   |   Update On 2023-03-14 13:13 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலில் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட GD சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவுகளை சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 13 ஆயிரம் என துவங்குகிறது. இன்னோவா க்ரிஸ்டா GX வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 150பிஎஸ் பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருளில் இயங்கும் வசதியும், RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த எம்பிவி மாடலில் 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே ரியர் ஆட்டோ ஏசி, சீட் பேக் டேபில் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது. இத்துடன் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News