கன்னி - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-05-21 13:51 IST   |   Update On 2023-05-21 13:51:00 IST

22.5.2023 முதல் 28.5.2023 வரை

புதிய அரிய வாய்ப்புகள் பெறும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எடுத்த காரியங்களை திறமையாக செய்து முடிப்பதால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

நெடுங்காலமாக விற்க முடியாமல் தடைபட்ட சொத்துக்களை இப்பொழுது விற்க முடியும். பட்டா இல்லாமல் இருந்த சொத்திற்கு பட்டா கிடைக்கும்.சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக்கும். பூர்வீகச் சொத்திற்காக தாத்தா, பாட்டி உறவில் ஏற்பட்ட விரிசல் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

செயற்கை முறை கருத்தரிப்பால் புத்திர பாக்கியம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்கு வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். புதன் கிழமை நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News