ஞானத்தில் சிறந்த மீன ராசியினரே!
புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மீன ராசிக்கு 6ம் அதிபதியான சூரியன் 12-ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் மறைகிறார்.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் மகிழ்ச்சியும், சந்தோஷமும் தொடரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க முடியும்.தொட்டது துலங்கும். பட்டது பூக்கும்.அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.புத்திர பிராப்தம் குல விருத்தி, உயர் கல்வி யோகம், வெளிநாட்டு உத்தியோகம், அரசு உத்தியோகம்,புண்ணிய காரியம் செய்யும் வாய்ப்பு என சுப பலன்கள் நடக்கும்.பேச்சுத் திறமை கூடும். அரிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும்.பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.
குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.பூர்வீகச் சொத்தில் நிலவிய இழுபறி நிலை மாறும். பெற்றோர்களின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கைபராமரிப்புச் செலவு அதிகமாகும். வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.ராசியை சனி பகவான் கடப்பதால் ஜென்ம சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். நோய் நொடி சீராகும். ஜென்மச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதாரம்
குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும். குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசதித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். புதிய கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையான சம்பவங்கள் நடைபெறும்.பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
முதலீட்டாளர்கள்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம்.
உத்தியோகஸ்தர்கள்
புதிய அனுபவம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தவறை உணர்ந்து உறவு பாராட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும்.வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.
அரசியல்வாதிகள்
எதிலும் உங்கள் கை ஓங்கும். எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவ உதவியால் உடல் நிலை தேறும்.செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். நினைத்ததை அடைய முடியும். உங்களுக்குள் வேகமும் தைரியமும் கூடும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவியை அடைய முடியும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.
பெண்கள்
பெண்கள் மகிழ்சியாக இல்லறம் நடத்துவார்கள்.பெண்கள் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு என பணத்தை பெருக்குவார்கள்.திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.சுப செலவுகளுக்கு சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும்.செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும். கடன் தொல்லை, வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். குடும்ப பிரச்சனையில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஏமாறாதீர்கள்.
கவனம் தேவை
சூரிய கிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மீன ராசிக்கு 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்.கெட்டவன் ராகு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். எனினும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும்.
அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும்.கிரகண காலகங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரிய குறையும்.கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மீன ராசிக்கு 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.விலை உயர்ந்த பொருட்கள்,ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையால வேண்டும்.
கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும். பிறகுக்கும் கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல.பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும்.தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கஷ்டங்கள் விலகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406