மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க முற்படுவர். ஆனால் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பொதுவாழ்விலே எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்காது. புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இதுபோன்ற நேரங்களில் உடல்நிலையிலும் கவனம் தேவை. உடன் இருப்பவர்களிடமும் கவனத்தோடு இருப்பது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற வற்றில் கவனம் செலுத்துவீர்கள். சொத்துகள் வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டும். இல்லையேல் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தகராறுகள் அதிகரிக்கும். 'பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். 'தொழில் போட்டிகளை சமாளிக்க இயலவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். பிறரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அது நடைபெறாமல் போகலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்கு கிறார். எனவே மேல் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் பொழுது, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் 2-ம் இடம் புனிதமடைகிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ - மாணவிகளுக்கு சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது. பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சி களில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 29, 30, 31, செப்டம்பர்: 1, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.