துலாம் - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-05-21 13:51 IST   |   Update On 2023-05-21 13:52:00 IST

22.5.2023 முதல் 28.5.2023 வரை

மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானம் செல்வதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மகான்களின் தரிசனம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.பேரன், பேத்தி பிறப்பார்கள். தந்தையின் வெகு நாள் ஆசை, லட்சியத்தை நிறைவு செய்வீர்கள்.உங்கள் மருமகன் தேவையான நேரத்தில் கை கொடுத்து உதவுவார். வேலை இழந்த வாழ்க்கைத் துணைக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளிடம் இருந்து எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும்.திரைக்கலைஞர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணமும், புகழும் கிடைக்கும். லாப ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலை மிக நேர்த்தியாக நடத்த வேண்டும். அலட்சியம் கூடாது.

சிலருக்கு மறுமணம் ஏற்படும். சிலர் வீட்டு கடன் பெற்று வீடு வாங்கலாம். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வெள் ளிக்கிழமை அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News