துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

Published On 2025-11-30 10:28 IST   |   Update On 2025-11-30 10:29:00 IST

30.11.2025 முதல் 6.12.2025 வரை

துலாம்

சங்கடங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.

குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News