வார ராசிபலன் 8.2.2026 முதல் 14.2.2026 வரை
துலாம்
புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனுடன் சஞ்சரிக்கிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் தனித் திறமைகளை வெளிப் படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும்.
பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள். சிலர் புத்திர பாக்கியத்தை அடைய செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தினமும் மாலை வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட கடன் தீர்ந்து தாராள தன வரவு உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406