வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை
21.12.2025 முதல் 27.12.2025 வரை
துலாம்
மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு குரு பார்வை உள்ளது. சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். வராக்கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
நோய்த் தொல்லை குறையும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். 6மிட ராகுவால் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும்.
உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குருபகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தினமும் லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406