வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
துலாம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. வாழ்வில் மறக்க முடியாத இனிய நல்ல சம்பவங்கள் நடைபெறும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும்.
வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406