வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
துலாம்
சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். எடுத்த செயலில் இறுதிவரை போராடி வெற்றி பெறுவீர்கள். இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்கள் விலகி நிம்மதி பிறக்கும். நிதானமாக சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாழ்நாள் லட்சியங்கள் கனவுகளை நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
பெண்கள் குடும்பத் தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான நேரம். ஆண்களுக்கு மாமனார் மூலம் அசையும், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கல்யாணக் கனவு நனவாகும். திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406