வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
துலாம்
இன்னல்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும்.
பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழிலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. அரசுப் பணியாளர்கள் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். தந்தை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதுவார்கள்.
சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். ஶ்ரீ ரங்கநாதரையும் தாயாரையும் வணங்கி வர நலம் பெருகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406