சிம்மம் - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-02-20 04:50 GMT   |   Update On 2023-02-20 04:50 GMT

20.2.2023 முதல் 26.2.2023 வரை

அனுகூலமான வாரம். தனலாப அதிபதி புதன் ராசிக்கு 6-ம்மிடம் செல்வதால் இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடி யாக கிடைக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். திருமண வயதினரின் வீட்டில் கெட்டி மேளம் ஒலிக்கும். ராசி அதிபதி சூரியன் அஷ்ட மாதிபதி சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமான வர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். மாசி மாதம் முடியும் வரை வழக்குகள் மற்றும் அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்தல் நலம். ராசிக்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்று முழுப்பணமும் வீடு வந்து சேரும்.

22.2.2023 அன்று காலை 1.10 முதல் 24.2.2023 அன்று காலை 3.43 வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை யும், வாக்குக் கொடுப்ப தையும் தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News