வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
சிம்மம்
லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் தனலாப அதிபதி புதனுடன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அற்புதமான வாரம். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல யோகமான பலனை பெறக்கூடிய நேரம். நிதி நிலையை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும்.
வியாபாரிகள் நல்ல வாய்ப்புகள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்வர். தொழிலாளர்கள் ஆதரவால் உற்பத்தி பெருகி, லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையில் சேரும் அமைப்பு உள்ளது. மதிப்பு மிகுந்த நல்ல சொத்துக்கள் சேரும். புதிய இரண்டு, நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள்.
அனைத்து விதமான சாதகமான பலன்களும் சிம்ம ராசியினருக்கு உண்டு. வங்கித் தொழில், ஜோதிடம், புத்தக விற்பனை, ஆலோசனை வழங்கும் கன்சல்டிங் நிறுவனங்கள், காலி மனை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். சிலருக்கு சுகர், பிரஷர், மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகும். தனலட்சுமியை வழிபட தனசேர்க்கை கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406