சிம்மம் - வார பலன்கள்

வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை

Published On 2025-12-21 09:47 IST   |   Update On 2025-12-21 09:48:00 IST

21.12.2025 முதல் 27.12.2025 வரை

சிம்மம்

சகாயங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் குரு சனி பார்வையில் சஞ்சரிக்கிறார். புத்திக் கூர்மை கூடும். புதிய சிந்தனைகள் உருவாகும். மனச் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும்.

சிலருக்கு தாய் வழிச் சீதனங்களாக பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். 27.12.2025 அன்று அதிகாலை 3.10க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இறை நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள அற்புதங்கள் நிறைந்த வாரமாக மாறும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News