வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
சிம்மம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு.
குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406