வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
சிம்மம்
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். சிம்ம ராசிக்கு மிகப் பெரிய யோகமாகும். கடந்த சில மாதங்களாக பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த துக்கங்களும் துயரங்களும் விலகும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராகும். கடன் பிரச்சினை குறையும். தந்தையின் அனுசரணை கூடும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களால் காரியம் சாதிப்பீர்கள். சம்பள பாக்கிகள் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். எதிரிகளை வெல்லும் வலிமை ஏற்படும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். கோபுர தரிசனம் செய்வதால் கோடி புண்ணியம் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406