சிம்மம் - வார பலன்கள்

வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை

Published On 2025-10-26 10:54 IST   |   Update On 2025-10-26 10:54:00 IST

26.10.2025 முதல் 1.11.2025 வரை

சிம்மம்

செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம். ராசிக்கு 4ம்மிடமான சுகஸ்தானத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது சிம்ம ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் அமைப்பாகும். மனதில் புத்துணர்வு உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். தாய் வழி சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். புதிய சொத்துக்கள் சேரும்.

சொத்துக்களின் மதிப்பு உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வம் கூடும். அஷ்டம சனியை மீறி சில நல்ல பலன்கள் நடக்கும். அஷ்டமச்சனியின் காலமே சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்படுத்து வீர்கள். புத்திரப் பிராப்த்தம் உண்டாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும்.

2.11.2025 அன்று பகல் 11.27 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளிடம் பொறுமையை கடைபிடிப்பதால் நல்லிணக்கம் உண்டாகும். கந்த சஷ்டி அன்றுநெய் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News