null
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
சங்கடங்கள் நீங்கும் வாரம். உச்சம் பெற்ற தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் ராசி அதிபதி சூரியன் சேர்க்கை பெற்றுள்ளார். புகழ், அந்தஸ்து கவுரவம் கூடும். நம்பிக்கை, நாணயம் உயரும். தங்கு தடையில்லாத பணவரவு ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.
வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். போட்டி, பொறாமைகள் அகலும். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. நோய், நொடிகள் நிவர்த்தியாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும்.
எதிர்கால தேவைக்காக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் அல்லது சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் அஷ்டம சனி காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்கள் குறையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406