மகர ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சுக்ரனோடு கேது இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த காரியங்களில் எண்ணற்ற தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். எதிலும் ஈடுபாடு ஏற்படாமல் மனம் அலைபாயும். அதுமட்டுமல்லாமல் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். குருவின் அதிசார பெயர்ச்சிக்கு பிறகு நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதம் சம்பள விகிதமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது ஒரு அற்புதமான நேரமாகும். ஏழரைச் சனி நடந்தாலும் கூட குருவின் பார்வையால் நல்ல மாற்றம் இல்லம் தேடிவரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குரு பகவானை வழிபடுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவி தானாக வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தொழில் சிறப்பாக நடைபெறும். என்னயிருந்தாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திடீர் செலவுகளை சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தன ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்று கவலைப் படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி புரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும்.பயணங்களால் விரயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 22, 23, 26, 27, அக்டோபர்: 5, 6, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.