மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

2026 மாசி மாத ராசிபலன்

Published On 2026-02-12 12:32 IST   |   Update On 2026-02-12 12:33:00 IST

உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே!

பிறக்கும் மாசி மாதத்தில் சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். மாசி 11 (23.2.2026) முதல் செவ்வாயும் 2ம்மிடம் சென்று ராகுவுடன் இணைகிறார். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்.குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.

உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம்.வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம்.

உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். புது வீடு கட்டலாம். சுப விரய செலவுகள் ஏற்படும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.

நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.வைத்தியச் செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும்.

பொருளாதாரம்

பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். போதிய வருமானத்தால் உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள் .தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். விவசாயிகள், கால்நடையாளர்கள் பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.

உத்தியோகஸ்தர்கள்

மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.பணியில் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும்.

அரசியல்வாதிகள்


மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டீர்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பீர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும்.

ராசிக்கு இரண்டில் ராகு எட்டில் கேது இருப்பதால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. பொது இடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும். முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற உறவுகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார் கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம்.மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும்.

சூரிய கிரகணம்

மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்க உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.

திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் கூட சிலருக்கு நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன் கோபத்தில் பகைமை உருவாகும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது. வழக்குகள் , அறுவை சிகிச்சை,வெளியூர் வெளி நாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கௌரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்து வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News