கடகம் - வார பலன்கள்

வார ராசிப்பலன்

Published On 2022-10-31 15:38 IST   |   Update On 2022-10-31 15:41:00 IST

31.10.2022 முதல் 06.11.2022 வரை

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். 3-ம் இடமான சகோதர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விரைவில் அஷ்டமச் சனியின் தாக்கம் ஏற்பட உள்ளதால் தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும். சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். 2.11.2022 பகல் 2.15 முதல் 4.11.2022 மாலை 6.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன பிரச்சினையை கூட பெரிதாக எண்ணி கவலைப்படுவீர்கள். சந்திரனை தரிசனம் செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News