கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

Published On 2025-11-23 10:24 IST   |   Update On 2025-11-23 10:25:00 IST

23.11.2025 முதல் 29.11.2025 வரை

கடகம்

புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள்.

கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும்.

பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News