கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

Published On 2026-01-04 09:29 IST   |   Update On 2026-01-04 09:30:00 IST

4.1.2026 முதல் 10.1.2026 வரை

கடகம்

மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும்.

கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News