கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை

Published On 2025-12-28 09:46 IST   |   Update On 2025-12-28 09:46:00 IST

28.12.2025 முதல் 3.1.2026 வரை

கடகம்

தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத்தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.

தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத்திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News