வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
கடகம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் குரு உச்சம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி என உலவுகின்ற கிரக நிலை ஓரளவு உதவிகரமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.
தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும். சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும்.
31.10.2025 காலை 6.48 மணி முதல் 2.11.2025 அன்று பகல் 11.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பிடிவாதத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். கந்த சஷ்டியன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406