கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

Published On 2025-05-04 10:13 IST   |   Update On 2025-05-04 10:14:00 IST

4.5.2025 முதல் 10.5.2025 வரை

சகாயமான வாரம். தனாதிபதி சூரியன் 3,12ம் அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் சேர்க்கை. விரும்பிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்ப தோஷம் விலகும். பொன், பொருள், ஆடம்பரச் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வரவு அதிகரித்து செலவு குறையும். கடன் தொல்லை குறையும். திட்டமிட்ட செயல்பாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். மனதில் அமைதி குடிபுகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிணக்குகள் மறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பெண்கள் கற்பனை கவலைகளைத் தவிர்த்து எதார்த்தமாக வாழப் பழக வேண்டும். தம்பதிகள் ஒருவர் மேல் மற்றவர் அன்பை பொழிவார்கள். கன்னியருக்கும், காளையருக்கும் உகந்த வரன் அமையும். மனைவி வழிச் சொத்து மற்றும் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன சஞ்சலம் அகலும். பிற இனத்தவர் மற்றும் மதத்தினரால் நன்மைகள் உண்டாகும். இளம் வயதினர் காதல் வயப்படுவார்கள். சுப விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குரு, சுக்ரன் பரிவர்த்தனை இருப்பதால் தங்க ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News